search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நாகர்கோவிலுக்கு பஸ்சில் கொண்டு வந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
    X

    நாகர்கோவிலுக்கு பஸ்சில் கொண்டு வந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

    • கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை குண்டா சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள்
    • கஞ்சா பொட்டலங்களை சிறிய சிறிய பொட்டலங்களாக பிரித்து மாணவர்கள் வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை குண்டா சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள். கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. போலீசார் சோதனை தீவிர படுத்தப்பட்டதையடுத்து கஞ்சா மற்றும் குட்கா விற்பனை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தற்பொழுது கொரியர் மூலமாக கஞ்சா பொட்ட லங்களை வரவழைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் அடிப்ப டையில் போலீசார் கொரியர் நிறுவனங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து குமரி மாவட்டத்திற்கு பஸ் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வடசேரி போலீசார் நேற்று இரவு வடசேரி பஸ் நிலையத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது வெளியூரில் இருந்து வந்த பஸ் ஒன்றில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் பேக்குடன் அமர்ந்திருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் லெபான் அமராவதி பகுதி யைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பது தெரிய வந்தது. இவர் கஞ்சா பொட்டலங்களை அங்கிருந்து கொண்டு வந்து குமரி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் இருவரையும் போலீசார் பிடித்தனர். அருகு விளை யைச் சேர்ந்த சிவக்குமார், பெரிய விளையைச் சேர்ந்த நந்தகுமார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    வெளியூர்களிலிருந்து கொண்டுவரும் கஞ்சா பொட்டலங்களை சிறிய சிறிய பொட்டலங்களாக பிரித்து மாணவர்கள் வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×