search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறையில் 52.8 மி.மீ. மழை
    X

    பேச்சிப்பாறையில் 52.8 மி.மீ. மழை

    • அணைகளுக்கு நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்தது
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட் களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவ தும் மழை பெய்தது.

    நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் இருந்து விட்டு விட்டு சாரல் மழை பெய் தது. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் இருந்து தப்பிக்க குடை பிடித்த வாறு சென்றனர். காலை 8 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

    ஆரல்வாய்மொழி, கொட்டாரம், மயிலாடி, தக்கலை, குலசேகரம் பகுதிகளிலும் மழை நீடித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    பேச்சிப்பாறையில் அதிக பட்சமாக 52.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் பேச்சி பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சி பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.31 அடியாக உள்ளது.அணைக்கு 1321 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 572 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சானி அணை நீர்மட்டம் 69.20 அடியாக உள்ளது. அணைக்கு 976 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 310 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.04 அடியாக உள்ளது. அணைக்கு 174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    சிற்றாறு -2 அணையின் நீர்மட்டம் 12.13 அடியாகவும் பொய்கை அணையின் நீர்மட்டம் 17 அடியாகவும் மாம்பழத்துறையார் அணை நீர்மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்து வரும் சாரல் மழை யின் காரணமாக குளுகுளு சீசன் நிலவி வருகிறது.திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவி யில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×