search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுப்பையார் குளத்தில் படகு விட நடவடிக்கை எடுக்கப்படும் - மேயர் மகேஷ் பேச்சு
    X

    சுப்பையார் குளத்தில் படகு விட நடவடிக்கை எடுக்கப்படும் - மேயர் மகேஷ் பேச்சு

    • ரூ.47 லட்சம் செலவில் சீரமைப்பு
    • சுப்பையார் குளத்தை சீரமைத்ததற்காக மேயர் மகேசிற்கு பாராட்டு விழா நடத்தினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ண ன்கோவில் சுப்பையார்குளம் உள்ளது. இந்த குளம் ஆகாயத்தாமரைகள் படர்ந்து சேறும் சகதியுமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலையில் காணப்பட்டது.

    குளத்தை தூர்வாரி சீரமைக்க 14-வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ் ரூ.47 லட்சம் செலவில் குளத்தை தூர்வாரி சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

    அதன்படி கடந்த சில நாட்களாக இந்த பணிகள் நடந்தது. குளத்தில் கிடந்த கழிவு மண் அகற்றிவிட்டு சுற்றுச்சுவர்கள் கட்டப்ப ட்டுள்ளது. இந்த நிலையில் 14-வது வார்டு பொதுமக்கள் சுப்பையார் குளத்தை சீரமைத்ததற்காக மேயர் மகேசிற்கு பாராட்டு விழா நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு 14-வது வார்டு கவுன்சிலர் கலா ராணி தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் பொதுமக்கள் மத்தியில் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர மத்தியில் இப்படி ஒரு குளம் கிடைப்பது அரிது. இந்த குளத்தை பொது மக்கள் நீங்கள் சுத்தமாக வைத்துக்கொள்ள வே ண்டும். இதற்கு குளத்தை சுற்றி நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதனையும் பாது காப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். குப்பைகளை குளத்திற்குள் கொட்ட க்கூடாது.

    வேறு பகுதியில் இருந்து வந்து கொட்டினாலும் அதை கண்காணித்து தடுக்க வேண்டும். குளத்தை சுற்றி தடுப்பு சுவர் மேல் கம்பிவேலி அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் வரும்போது குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.

    இந்த குளத்தை பாதுகாக்கும் வகையில் ஒரு பாதுகாப்புக்குழு அமைத்து குளத்தை கண்காணிக்க வேண்டும். குளத்தை சேதப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் இந்த குளத்தை நல்ல படியாக பராமரித்தால் படகு விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த குளத்தை பாதுகாக்கும்போது சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீரும் பெருகும். இந்த பகுதியில் உள்ள இடங்களுக்கும் மதிப்பு கூடும்.

    இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர துணை செயலாளர் வேல்முருகன், சிறுபான்மை நல உரிமை பாதுகாப்பு துணை அமைப்பாளர் ஜெகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×