search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்மகன் உசேன் தலைமையில் திரளானோர் பங்கேற்பு
    • அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சோதனை நடத்த சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்

    நாகர்கோவில், மே.29-

    தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், விளவங்கோடு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் அமைச்சர் பச்சைமால், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் வக்கீல் பரமேஸ்வரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், பொருளாளர் ஆர்.ஜே.கே. திலக், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், ஜெவின் விசு, கவுன்சிலர் அக்ஷயா கண்ணன், கோபால் சுப்பிரமணியன், சேகர், அனிலா சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வர அனைவரும் சூளூரை ஏற்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் கள்ள சாராயம் ஆறாக ஓடுகிறது. இதை தடுக்க அரசு தவறிவிட்டது. எனவே நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் விரைவில் வர இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூருக்கு, தமிழகத்தை முதலிடம் கொண்டு வருவதற்காக செல்லவில்லை. அவருடைய முதலீட்டை அங்கு செய்வதற்காக தான் சென்றுள்ளார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சோதனை நடத்த சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது ஆர்.டி.ஓ. பதவிக்கு ரூ.25 லட்சத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். நமது போராட்டம் செங்கோட்டை வரை ஒலிக்கும் வகையில் குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், பொன் சுந்தர்நாத், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துகுமார், முன்னாள் நகர செயலாளர் சந்துரு, தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், இளைஞர் பாசறை செயலாளர் ஷாநவாஸ், இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், வழக்கறிஞர் அணி செயலாளர் சுந்தரம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் வடிவை மகாதேவன், வெங்கடேஷ், ரபீக், ரெயிலடி மாதவன், கோட்டார் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கவுன்சிலர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கண்டன கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×