search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை இரவு வருகை
    X

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை இரவு வருகை

    • பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் மாவட்ட நிர்வாகிகள் நேரில் ஆய்வு
    • குமரியில் 3 நாள் நடைபயணம்

    நாகர்கோவில், ஆக.13-

    பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களை சந்தித்து வருகிறார். ராமநாதபுரத்தில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களில் நடை பயணத்தை முடித்துக் கொண்டு நாளை (14-ந்தேதி) இரவு கன்னியாகுமரி வருகிறார்.

    பின்னர் குமரி மாவட்டத் திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நாட்கள் அண்ணாமலை நடைபய ணம் மேற்கொள்கிறார்.

    15-ந்தேதி காலை 8 மணிக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட களியக்காவிளை யில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்குகிறார். அன்று மதியம் குழித்துறை யில் சிறப்புரை ஆற்றுகிறார். அங்கு அந்த பகுதியில் உள்ள சமூக தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். மாலை 4 மணிக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட வெட்டுமணியில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை எருதூர் கடையில் சிறப்புரை ஆற்றுகிறார்.

    17-ந்தேதி காலை பத்மநாபபுரம் தொகுதிக் குட்பட்ட சாமியார்மடம் பகுதியில் இருந்து நடை பயணம் மேற்கொள்கிறார். மணலியில் சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு குளச்சல் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தக்கலை பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை வில்லுக்குறி யில் சிறப்புரை ஆற்றுகிறார்.

    18-ந்தேதி காலை நாகர்கோவில் தொகுதிக் குட்பட்ட பார்வதிபுரத்தில் இருந்து அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கி வேப்பமூடு காமராஜர் சிலை முன்பு சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட கன்னி யாகுமரி ரவுண்டானாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கி கொட்டாரத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.

    அண்ணாமலை சிறப்பு ரையாற்ற உள்ள 6 இடங்க ளையும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ் தலை மையில் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாகர்கோவில் வேப்பமூட்டில் அண்ணா மலை பேச உள்ள இடத்தை மாவட்ட நிர்வாகிகள் பார்வையிட்டு அதற்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோ சனை மேற்கொண்டனர். மாநில செயலாளர் மீனா தேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணை தலைவர் தேவ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×