search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர். கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய ரவுண்டானா அமைக்கும் பணிகள் தொடங்கியது
    X

    நாகர். கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய ரவுண்டானா அமைக்கும் பணிகள் தொடங்கியது

    • ரவுண்டானா அமைக் கப்படும் பட்சத்தில் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு தீர்வு ஏற்படும்
    • புதிய ரவுண்டானா அமைப்ப தற்கும் அந்த பகுதியில் கழிவு நீர் ஓடை கட்டுவதற்கும் மதிப்பீடு தயாரிக் கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

    போக்குவரத்து நெருக்கடி யை குறைக்கும் வகையில் அந்த சாலை இரு வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியிலிருந்து ரவுண் டானா அகற்றப்பட்டு புதிய ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய ரவுண்டானா அமைப்ப தற்கும் அந்த பகுதி யில் கழிவு நீர் ஓடை கட்டு வதற்கும் மதிப்பீடு தயாரிக் கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டெண்டர் பிறப்பிக்கப் பட்டது. ரூ.1.50கோடியில் பணிகள் தொடங்கப்பட்டது. பழைய ரவுண்டானா இடித்து அகற்றப்பட்டது. புதிய ரவுண்டானா அமைப்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சாக்கு மூட்டைகளில் மணல் நிரப்பி தற்காலிகமாக ரவுண்டானா அமைக்கப்பட்டது. கடந்த இரு வார காலமாக சோதனை முறையில் வாக னங்கள் இயக்கப்பட்டு வந்தன. அந்த ரவுண்டானா அமைப்பதினால் எந்த போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ரவுண்டானா பணிகள் இன்று தொடங்கப்பட்டது.

    ரவுண்டானா அமைப்ப தற்கு அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகள் அகற்றப்பட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக ரவுண்டானா அமைப்ப தற்கான பள்ளங்கள் தோண்டப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளங்களில் கான்கிரீட் போடப்பட்டது. பின்னர் சாலையின் மேல் ரவுண்டானா அமைக்க கம்பிகள் கட்டப்பட்டது. இந்த ரவுண்டானா அமைக் கப்படும் பட்சத்தில் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு தீர்வு ஏற்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×