search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அணை பகுதியில் மழை நீடிப்பு
    X

    அணை பகுதியில் மழை நீடிப்பு

    • பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
    • புத்தன் அணையில் அதிகபட்சமாக 3.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது.

    புத்தன் அணையில் அதிகபட்சமாக 3.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 150 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 715 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்ப ட்டு வருகிறது. பேச்சி ப்பாறை அணையின் நீர்ம ட்டம் இன்று காலை 36.67 அடியாகவும், பெருஞ்சானி அணை நீர்மட்டம் 21.35 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×