search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பரிசோதனை செய்த 20 சதவீதம் பேருக்கு கொரோனா
    X

    குமரி மாவட்டத்தில் பரிசோதனை செய்த 20 சதவீதம் பேருக்கு கொரோனா

    • 15 நாட்களில் பாதிப்பு 200-ஐ கடந்தது
    • பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்சை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக முன்சிறை ஒன்றியத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று குருந்த ன்கோடு யூனியனில் அதிகமானோர் பாதிக்கப்ப ட்டுள்ளனர்.

    அங்கு அதிகபட்சமாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர் ஒன்றியத்தில் 2 பேரும் ராஜாக்கமங்கலம் தக்கலையில் தலா மூன்று பேரும், மேல் புறத்தில் ஒருவரும், திருவட்டாறில் 5 பேரும், முன் சிறையில் 10 பேரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    நாகர்கோவில் ராமன்பு தூர், மேல சூரங்குடி பகுதியைச் சேர்ந்த 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று பரிசோதனை செய்யப்பட்ட 20 சதவீதம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது சுகாதாரத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தி யுள்ளது.

    மாவட்டத்தில் 264 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்ய ப்பட்டுள்ளது. இதில் 17 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள் ஆவார்கள். கடந்த 16 நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்க ளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறா ர்கள்.ஆசாரிபள்ளம் ஆஸ்பத்தி ரியில் உள்ள கொரோனா வார்டில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளது. ஆனால் அங்கு ஒருவர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளார்.

    தற்போது பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுவதால் ஆஸ்பத்திரிக்கு வருவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.மேற்கு மாவட்ட பகுதியில் இருந்து தற்போது கிழக்கு மாவட்ட பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சுகாதாரத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×