search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குமரியில் புதிதாக 52 பேருக்கு தொற்று நாகர்கோவிலிலும் கொரோனா வேகமாக பரவுகிறது
    X

    குமரியில் புதிதாக 52 பேருக்கு தொற்று நாகர்கோவிலிலும் கொரோனா வேகமாக பரவுகிறது

    • 20 நாட்களில் 311 பேர் பாதிப்பு
    • மாவட்டம் முழுவதும் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொரோனா சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

    குறிப்பாக முன்சிறை திருவட்டாறு ஒன்றியங்களில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து இந்த பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. தற்போது நாகர்கோவில் பகுதியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களாக தினமும் ஐந்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று நாகர்கோவில் மாநகரில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட வர்கள் வசித்து வரும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொேரானா சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக 200 ேபருக்கு மட்டுமே கொரோனா சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று 839 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் பரிசோதனை மேற்கொண்டு அதில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் 34 பேர் பெண்கள் 18 பேர் ஆண்கள் ஆவார்கள். இந்த மாதத்தில் இதுவரை 311 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 19 ஆயிரத்து 727 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    Next Story
    ×