search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி மகாதானபுரத்தில் சூறைக்காற்றில் சேதமான தேசிய கொடி மீண்டும் ஏற்றப்பட்டது - பராமரிக்கும் பணி ராணுவ வீரர்களிடம் ஒப்படைப்பு
    X

    கன்னியாகுமரி மகாதானபுரத்தில் சூறைக்காற்றில் சேதமான தேசிய கொடி மீண்டும் ஏற்றப்பட்டது - பராமரிக்கும் பணி ராணுவ வீரர்களிடம் ஒப்படைப்பு

    • கடந்த ஒருமாதகாலமாக 150 அடி உயர கொடி கம்பம் தேசியக்கொடி இல்லாமல் வெறுமனே காட்சியளித்தது
    • 50 அடி உயர தேசிய கொடியை பராமரிக்கும் உரிமைக்கான சான்றிதழை ராணுவ அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மகாதானபுரத்தில் முன்னாள் எம்.பி. விஜயகுமார் ஏற்பாட்டில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. இதில் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி தேசிய கொடி ஏற்றப்பட்டது. மறுநாளே அந்த பகுதியில் வீசிய சூறாவளி காற்றினால் கொடி சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கொடிைய நிர்மாணிக்க காண்ட்ராக்ட் பெற்ற நிறுவன அலுவலர்களும் இதனை சரி செய்வதற்காக விரைந்துவந்தனர்.

    அவர்கள் சேதமடைந்த அந்த தேசிய கொடியை கீழே இறக்கினர். இதனால் கடந்த ஒருமாதகாலமாக 150 அடி உயர கொடி கம்பம் தேசியக்கொடி இல்லாமல் வெறுமனே காட்சியளித்தது. கன்னியாகுமரி பகுதியில் வீசும் சூறைக்காற்று மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு ஏற்றவாறு எந்த மாதிரியான தேசிய கொடியை ஏற்றலாம் என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் இன்று காலை அந்த 150 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி ராணுவ வீரர்கள் லெப்டினென்ட் கமாண்டர் சர்மா தலைமையில் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் இருந்து தேசியக்கொடியை ஏந்திய படி கன்னியாகுமரிஅருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதிக்கு வந்தடைந்தனர். அவர்கள் 150 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட அந்த தேசிய கொடிக்குவீரவணக்கம் செலுத்தி மரியாதைஅளித்தனர். அதன் பிறகு முன்னாள் எம்.பி. விஜயகுமார் அந்த 150 அடி உயர தேசிய கொடியை பராமரிக்கும் உரிமைக்கான சான்றிதழை ராணுவ அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

    Next Story
    ×