search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
    X

    குளச்சலில் போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

    • விசாரணைக்கு அழைத்து சென்றவரை விடுவிக்க வலியுறுத்தி கோஷம்
    • குளச்சல் போலீஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகம்மது ஜிஸ்தி, ஒய்.எம்.ஜெ மாவட்ட துணைச்செயலாளர் ஷேக் முகம்மது, த.மு.மு.க.மாவட்ட முன்னாள் பொறுப்பு தலைவர் அஷ்ரப், நகர த.மு.மு.க.செயலாளர் அபு தாகீர், எஸ்.டி.பி.ஐ.மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் இலப்பை விளையை சேர்ந்தவர் சாகுல்அமீது. இவரது மகன் முகம்மது அசாருதீன் (வயது 22). இவர் குளச்சல் பீச் ரோட்டில் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை 10 மணியளவில் தனிப்படை போலீசார் குளச்சல் வந்து முகம்மது அசாருதீனை விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.அவரது குடும்பத்தினர் குளச்சல் போலீஸ் நிலையம் சென்று கேட்டபோது சரியான தகவல் தெரிவிக்க வில்லை என கூறப்படுகிறது.

    மாலை ஆகியும் முகம்மது அசாருதீன் விடுவிக்கப்படாததால் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமையில் குளச்சல் போலீஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகம்மது ஜிஸ்தி, ஒய்.எம்.ஜெ மாவட்ட துணைச்செயலாளர் ஷேக் முகம்மது, த.மு.மு.க.மாவட்ட முன்னாள் பொறுப்பு தலைவர் அஷ்ரப், நகர த.மு.மு.க.செயலாளர் அபு தாகீர், எஸ்.டி.பி.ஐ.மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தகவலறிந்து வந்த குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தை முடிவில் சாகுல் அமீதுவிடம் போலீசார் எழுதி வாங்கிவிட்டு முகம்மது அசாருதீனை ஒப்படைத்தனர்.

    குளச்சல் போலீஸ் நிலையம் முன்பு நடந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×