search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • 2023-24 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

    மார்த்தாண்டம் :

    மத்திய அரசை கண்டித்து கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் கனரா வங்கி முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிள்ளியூர் வட்டார தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலை வர்கள் குமரேசன், மரிய அருள்தாஸ், ராஜகிளன், ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை ராஜேஷ்கு மார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

    100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய பா.ஜ.க. அரசு உரிய முக்கி யத்துவம் வழங்குவதில்லை. 2021-22 இல் ரூ.98,468 கோடி ஒதுக்கிய நிலையில், 2023-24 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

    ஆனால் எதிர்பார்க்கப் பட்ட பட்ஜெட் மதிப்பீடான ரூ.73 ஆயிரம் கோடியை விட 18 சதவீதம் குறை வாகவும், 2022-23 நிதி யாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.89 ஆயிரம் கோடியை விட 33 சதவிகிதம் குறைவாகவும் இருந்தது. இந்த நிதியாண்டில் 6 மாதங்களில் இந்த திட்டம் ரூ.6147 கோடி தற்போது பற்றாக்குறையில் உள்ளது என்று இணையதளத்தில் ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.

    இந்த பற்றாக்குறையின் விளைவாக ஆண்டுக்கு சராசரியாக வெறும் 17 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மோடி அரசு அநியாயமான முறையில் குறைவான அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டு மென்றால் ரூ2.72 லட்சம் கோடி தேவை. ஆனால் தற்போது அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

    கொரோனா காலத்தில் கிராமப்புற பொருளா தாரத்தை இத்திட்டம் தான் காப்பாற்றியது. கோடிக்க ணக்கான மக்களை பட்டினி கொடுமையிலிருந்து பாதுகாத்தது. முதல் கொரோனா ஊரடங்கின் போது 11 கோடி மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் வாழ்வாதாரமாக விளங்கி யது.

    இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டைட்டஸ், பால்மணி, மாநில பொதுசெயலாளர் ஆஸ்கர்பிரடி, நிர்வாகிகள் ஆசீர் பிரைட் சிங், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், , கிள்ளியூர் வட்டார பொதுசெயலாளர் எட்வின்ஜோஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், 100 நாள் வேலை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×