search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தீபாவளி விற்பனை அமோகம்
    X

    தீபாவளி விற்பனை அமோகம்

    • கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
    • வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு

    நாகர்கோவில், நவ.4-

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் இன்று கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் மழை பெய்து வந்த நிலையில் அதன்பிறகு மழை சற்று குறைந்து காணப்பட்டது.

    இதையடுத்து மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் இன்று நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் புத்தா டைகள் எடுக்க குவிந்திருந்த னர். இதனால் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் அலைமோதியது.

    சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர். தீபா வளியை குதூகலப் படுத்தும் வகையில் புத்தம் புதிய வடிவிலான குழந்தைகளுக் கான ஆடைகள் விற்பனைக்கு வந்திருந்தது. வடசேரி, செட்டிகுளம், கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள கடை வீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக இருந்தது.

    கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதால் நாகர்கோவில் நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. கோட்டார் பகுதிகளில் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தனர். வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்தே சென்றன. அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் பகுதியை கடந்து செல்வதற்கு மதிய நேரங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் கோட்டார், சவேரியார் ஆலய பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். செட்டிகுளம், வேப்பமூடு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    கடைவீதிகளில் கூட்டம் அலை மோதியதையடுத்து போலீசார் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஓடும் பஸ்களில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்ததையடுத்து பொதுமக்கள் பஸ்களில் எச்சரிக்கையுடன் பயணம் செல்லுமாறு போலீ சார் அறிவுறுத்தியுள்ளனர்.

    வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கிறார்கள். சந்தேகப்படும் படியான நபர்கள் யாராவது சுற்றி திரிந்தால் தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மார்த்தாண்டம், குளச்சல், அஞ்சு கிராமம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு கடைவீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக இருந்தது. பட்டாசுகள் விற்பனைக்கு வந்திருந்தாலும் இன்று கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

    Next Story
    ×