search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    நாகர்கோவிலில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

    • மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்
    • பி.பி- 2 ஐ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

    நாகர்கோவில்:

    மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், பி.பி- 2 ஐ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    கணக்காளர் களத்தொழிலாளர் சங்க மண்டல செயலாளர் அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் மாநில துணைத்தலைவர் சந்திரகுமார் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மின்வாரிய பொறியாளர் சங்கம் வட்ட செயலாளர் சுமன் ராஜ் மற்றும் நிர்வாகிகள் புஷ்பராஜ், சிவகர்ராஜ், ராஜா, மாரியப்பன் உள்பட ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×