search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது - கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்
    X

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது - கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்

    • 769 அங்காடி களுக்கு 1523 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • மகளிர் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கு மற்றும் சிறு கூட்டரங்கில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகளின் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது குறித்த மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சரியாக செயல்படுத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நியாவிலைக் கடைகளில் 500-க்குட்பட்ட குடும்ப அட்டை கொண்ட 200 அங்காடிகளுக்கு 200 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும், 501 முதல் 1000 குடும்ப அட்டை கொண்ட 395 அங்காடிகளுக்கு 790 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும், 1001 முதல் 1500 குடும்ப அட்டை கொண்ட 163 அங்காடி களுக்கு 489 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார் வலர்களும், 1501 முதல் 2000 குடும்ப அட்டை கொண்ட 11 அங்காடிகளுக்கு 44 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும் என மொத்தம் 769 அங்காடி களுக்கு 1523 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டமானது மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதை யோடு வாழ்வதற்கு இத்திட்டத்தினை சிறப்பாக செயல் படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    குறிப்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகாம் நடைபெறும் இடங் களில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் பணியாளர்களை தேர்வு செய்வது அவர்களுக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்ட ஒட்டுமொத்த பணியினையும் மேற் கொள்ள வேண்டும்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள், ஊராட்சிகள்) முகாம் நடைபெறும் இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி மற்றும் நக ராட்சி ஆணையர்கள் இத்திட்டம் குறித்து பொது மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். தன்னார்வலர்கள் மேலாண்மையினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும்.

    கூட்டுறவு துறையின் இணைப்பதிவாளர் அனைத்து நியாவிலைக் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட மின் ஆளுமை மேலாளர் பயோ மெட்ரிக் கருவிகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் வழங்கிட வேண்டும். முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் அஞ்சலக வங்கி பொறுப்பாளர், மகளிர் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அலு வலர்களும் தினந்தோறும் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படுவதோடு, அனைத்து பணிகளையும் எவ்வித தொய்வுமின்றி முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் வருவாய் அலு வலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், திட்ட இயக்குநர்கள் பாபு (வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×