search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகம்-கேரளாவில் கொள்ளையடித்த பணத்தில் நண்பர்களுக்கு விருந்து அளித்து உல்லாச வாழ்க்கை - தக்கலையில் கைதான வாலிபர் பற்றி பரபரப்பு தகவல்கள்
    X

    தமிழகம்-கேரளாவில் கொள்ளையடித்த பணத்தில் நண்பர்களுக்கு விருந்து அளித்து உல்லாச வாழ்க்கை - தக்கலையில் கைதான வாலிபர் பற்றி பரபரப்பு தகவல்கள்

    • மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 65 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளை
    • வீட்டில் போலீசார் சோதனை செய்த போது கொள்ளையடித்து பதுக்கி வைத்திருந்த 55 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள ஈத்தவிளையை சேர்ந்தவர் சோமன் (வயது 54), வியா பாரி.

    இவர் கேரளாவிற்கு வாழைக்காய் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 3-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சோமன் கோவிலுக்கு சென்றார்.

    இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 65 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளை யடித்துச் சென்றனர். இது குறித்து கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் சோமன் புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனிப்படையும் அமைக்க ப்பட்டது. இந்தநிலையில் தக்கலை போலீஸ் இன்ஸ் பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் மேக்காமண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஈத்தவிளை வாழைக்காய் வியாபாரி வீட்டில் கொள்ளை அடித்தது அவர் தான் என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் ஸ்டீபன் என்பதும் நெல்லியாரக்கோணம் பகுதியைச் சேர்ந்த இவன் தற்போது கீழகல்குறிச்சி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது.

    இவன் தமிழகம் மட்டு மின்றி கேரளாவிலும் கைவரிசை காட்டி உள்ளான். மேலும் கொள்ளையடித்த பணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஸ்டார் ஒட்ட ல்களில் மது அருந்தி பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்திருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

    கைதான ஸ்டீபன் இரவு நேரத்தில் திருடுவது கிடையாது. பகல் நேரத்தில் பூட்டி கிடக்கும் வீடுகளில் கைவரிசை காட்டுவது தான் அவனது பழக்கமாகும். இவன் மீது சிவகங்கை, திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி மற்றும் கேரள மாநிலம் பத்தனம்திட்டை, சங்கனாச்சேரி உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் 40 திருட்டு வழக்குகள் உள்ளன.

    திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்டீபன், குண்டர் சட்டத்தில் சிறை சென்றுள்ளான். அதன்பிறகும் அவன் திருட்டை கைவிடவில்லை.கடந்த 3 மாதங்களாக குமரி மாவட்டத்தில் குளச்சல், இரணியல், கொன்றிக்கோடு பகுதிகளில் 6 வீடுகளில் இவன் கைவரிசை காட்டி உள்ளான்.

    அவனது வீட்டில் போலீசார் சோதனை செய்த போது கொள்ளையடித்து பதுக்கி வைத்திருந்த 55 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

    Next Story
    ×