search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சியில் சாலை சீரமைப்புக்கு மேலும் ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கீடு - மேயர் மகேஷ் தகவல்
    X

    நாகர்கோவில் மாநகராட்சியில் சாலை சீரமைப்புக்கு மேலும் ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கீடு - மேயர் மகேஷ் தகவல்

    • ரூ.1.20 லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
    • சாலை சீரமைப்பிற்கு மேலும் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் மேல தெருவில் ரூ.2.45 லட்சம் செலவில் சாலை பணியை மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.

    இதே போல 39-வது வார்டுக்கு உட்பட்ட இடலாக்குடி பள்ளித்தெரு, வேம்படி தெரு, கடைத் தெரு பகுதிகளில் ரூ.59 லட்சத்தில் சீரமைப்பு பணி மற்றும் கீழ மறவன்குடியிருப்பு மெயின் ரோடு ரூ.50 லட்சம் செலவில் சீரமைப்பு பணி, ரூ.1.20 லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஆகியவற்றையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர் கோபால் சுப்ரமணியன், எம்.ஜே.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரை முன் மாதிரியான மாநக ராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாலை சீரமைப்பிற்கு ஏற்கனவே ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை சீரமைப்பிற்கு மேலும் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விரைவில் டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். குப்பை இல்லா மாநகராட்சியாக மாற்ற முழு முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

    மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் உள்ள குப்பை களையும் தரம் பிரித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சாலை ஓரங்களில் உள்ள ஆக்கர் கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கடைகளில் முன் பகுதியில் பல்வேறு இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கடைக்காரர்கள் தானாக முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×