search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவிலில் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

    • கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது.
    • இந்த ஆண்டு இதுவரை 65 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் 7 பறக்கும் படைகள் அமைக்க ப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

    கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கஞ்சா வழக்குகளில் சிக்குபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 65 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 20 பேர் கஞ்சா வியாபாரிகள் ஆவார்கள்.

    இந்த நிலையில் மேலும் ஒரு கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து குண்ட சட்டம் கைது செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

    ஆரல்வாய்மொழி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக பணகுடி சிவகாமி புரத்தைச் சேர்ந்த ராமைய்யா (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவர் மீது ஏற்கனவே ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து ராமையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அரவிந்த் கஞ்சா வியாபாரி ராமையாவை குண்ட சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டு உள்ளார். ராமையா குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் இருந்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×