search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கன்னியாகுமரியில் கோவில் சன்னதி தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகள் - பக்தர்கள் முகம் சுளிக்கிறார்கள்
    X

    கன்னியாகுமரியில் கோவில் சன்னதி தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகள் - பக்தர்கள் முகம் சுளிக்கிறார்கள்

    • குப்பைகள் அகற்றப்படாததால் மலைபோல் குவிந்து கிடக்கின்றன
    • காலை மற்றும் மாலை நேரங்களில் பேரூராட்சி நிர்வாகம் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தின மும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் சனனதி தெரு வழியாக செல்வது வழக்கம். அதுமட்டுமின்றி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் படகு துறைக்கு இந்த வழியாகத்தான் செல்வார்கள். அப்படிப்பட்ட முக்கி யத்துவம் வாய்ந்த இந்த சன்னதிதெருவில் விவேகானந்தா ராக் ரோடு சந்திக்கும்பகுதியில் குப்பைகள் அகற்றப்படாததால் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மூட்டை முடிச்சுகளும் ஆங்காங்கே பரந்து விரிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றமும் வீசுகிறது.

    இதனை கடந்து செல்லும் போது பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வேதனை அடைந்து முகம் சுளிக்கிறார்கள். எனவே இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் பேரூராட்சி நிர்வாகம் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் விரும்புகிறார்கள். அதற்கு பேரூராட்சி நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்து றையும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×