search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகரில் இளம்பெண், குழந்தைகள் மீட்பு
    X

    நாகரில் இளம்பெண், குழந்தைகள் மீட்பு

    • பைனான்ஸ் விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய கும்பல்
    • ஆட்டோ டிரைவர் பைனான்ஸில் ஆட்டோவை வாங்கிவிட்டு பணத்தை செலுத்தாதது தெரிய வந்தது.

    நாகர்கோவில் :

    திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது வாலிபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நாகர்கோவிலில் தங்கி ஆட்டோவில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு இடலாக்குடி ஆணை பாலம் பகுதியில் அந்த வாலிபர் தனது மனைவி குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்தது. பின்னர் ஆட்டோவில் இருந்த அந்த வாலிபரை தாக்கியதாக தெரிகிறது.இதனால் அந்த வாலிபர் கூச்சலிட்டார்.

    இதையடுத்து அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். ஆட்டோவில் வந்த வாலிபரை தாக்கிய வரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது மற்றொரு வாலிபர் ஆட்டோவை எடுத்துக் கொண்டு சென்றார். ஆட்டோவில் வாலிபரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பொதுமக்கள் பிடியில் இருந்த வாலிபரை மீட்ட போலீசார் அவரிடம் விசா ரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் ஆட்டோவை வைத்திருந்த நபர் நீண்ட நாட்களாக பணத்தை கட்டததால் பணத்தை கேட்க வந்த போது அவர் கொடுக்கவில்லை.

    இதனால் வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். ஆட்டோவில் தப்பி சென்ற வாலிபரை தொடர்பு கொண்டு கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு தகவல் தெரிவித்தனர். அவரும் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    ஆட்டோவில் அழைத்துச் சென்ற பெண் மற்றும் குழந்தைகளும் போலீஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஆட்டோ டிரைவர் பைனான்ஸில் ஆட்டோவை வாங்கிவிட்டு பணத்தை செலுத்தாதது தெரிய வந்தது. அந்த பணத்தை விரைவில் கொடுப்பதாகவும் கூறினார். இரு தரப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    பேச்சுவார்த்தையில் நிதி நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய பணத்தை விரைவில் கட்டுவதாக ஆட்டோ டிரைவர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து இரு தரப்பினரும் எழுதிக் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

    Next Story
    ×