search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கன்னியாகுமரி சன்னதி தெருவில் கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    கன்னியாகுமரி சன்னதி தெருவில் கடும் போக்குவரத்து நெரிசல்

    • தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
    • சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரிமாவட்டத்தில் நகரசபை அந்தஸ்த்தில் உள்ள ஒரே பேரூராட்சி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும்.

    இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் அமைந்து உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி கன்னியா குமரி ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இதனால் நாள்ஒன்றுக்கு சராசரி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள்இங்கு வந்து செல்கிறார்கள். சீசன் காலங்களில் நாள்ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி நகரப்பகுதி மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த சுற்று வட்டார பகுதிகளின் தலைநகரம் போலவும் கன்னியாகுமரி விளங்கிவருகிறது. மிக குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்த பகுதியாக கன்னியாகுமரி சுற்றுலாத் தலம் அமைந்து உள்ளது.

    ஆனால் பெருகிவரும் மக்கள்தொகை வாகன பெருக்கம் மற்றும் வளர்ச்சி க்கு ஏற்ப கன்னியாகுமரி பகுதி ரோடுகள் விரிவா க்கப்படவில்லை. கன்னியா குமரி யில்உள்ள சன்னதி தெரு, விவேகானந்தா ராக் ரோடு, ரத வீதிகள் கடற்கரை சாலை போன்ற பகுதிகள் நெருக்கடி நிறைந்த பகுதிகளாகவே காணப்படுகிறது.

    இந்த பகுதிகளில் தான் பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரைப்பகுதி, சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்கக்கூடிய பகுதி, பொழுது போக்கு பூங்காக் கள் போன்ற சுற்றுலாத் தலங்கள் அமைந்து உள்ளன.

    அதுமட்டுமின்றி சன்னதிதெரு, ரதவீதிகள் போன்ற பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் ஓட்டல்கள், மற்றும் கடைகள் அமைந்துஉள்ளன. இதனால் இந்த பகுதிகளில் சுற்றுலா வரும் வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இதனால் கன்னியாகுமரி சன்னதி தெருமற்றும் ரதவீதி பகுதிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் உச்சத்தை அடைந்து விடுவதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக குறுகலான சன்னதி தெரு பகுதி யில் சுற்றுலா வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படு கின்றன. மேலும் நெருக்கடி மிகுந்த சன்னதி தெரு பகுதியில் "டூ-வீலர்"களை வரிசையாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதற்கிடையில் கன்னியா குமரி சன்னதிதெருவில் உள்ள லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை லாட்ஜ்கள் முன்பே நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடி யாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரு கிறது. அதுமட்டுமின்றி கன்னியாகுமரி சன்னதி தெருவில் நோ பார்க்கிங் உள்ள இடங்களில் சுற்றுலா வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள் ளது.

    இவ்வாறு சன்னதி தெருவில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்போது போலீசார் வந்து வாகனங்களை அகற்றி போக்குவரத்து நெருக்கடியை சமாளித்து வருகின்றனர்.

    எனவே கன்னியாகுமரி சன்னதி தெருவில் சுற்றுலாவாகனங்கள் நுழையபோலீசாரும் கன்னியகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வா கமும்தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி கன்னியாகுமரி சன்னதி தெருவில்வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தபடு வதை அவ்வப் போது போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும்.

    மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி வாகனங்கள் நிறுத்த மாற்று இடங்களில் தனியாக பார்க்கிங் வசதி ஏற்படுத்த கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×