search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவில் வாலிபரை மயக்கி நகை பறித்த பெண் உள்பட 2 பேர் கைது
    X

    கேரளாவில் வாலிபரை மயக்கி நகை பறித்த பெண் உள்பட 2 பேர் கைது

    • நாகர்கோவிலில் போலீசார் மடக்கினர்
    • இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி அருகே இதுபோன்ற மோசடி

    நாகர்கோவில் :

    கேரளாவில் ஆண்களிடம் மயக்கும் விதத்தில் பேசி, அவர்களை தனியாக அழைத்துச் சென்று இளம்பெண் ஒருவர் நகை-பணம் பறிப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.

    ஆனால் நகை-பணத்தை இழந்தவர்கள் யாரும் புகார் எதுவும் கொடுக்காததால், இந்த சம்பவம் குறித்து போலீசார் ரகசிய விசார ணையில் ஈடுபட்டனர். அப்போது, இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி அருகே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார், நகை-பணத்தை பறி கொடுத்தவரிடம் விசா ரணை நடத்தினர். அப்போது அவர், வெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் தன்னிடம் மயக்கும் வகையில் பேசியதாகவும் பின்னர் அவர், ஆட்டோவில் ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரி வித்தார். மேலும் அந்தப் பெண் கொடுத்த குளிர்பா னத்தை குடித்ததும் தான் மயங்கி விட்டதாகவும், கண் விழித்து பார்த்தபோது நகை-பணத்துடன் பெண் மாயமாகி விட்டது தெரிய வந்ததாகவும் அவர் கூறி னார்.

    இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, மோசடியில் ஈடுபட்ட பெண் வெட்டிக்காடு சிந்து (வயது 34) என தெரியவந்தது. அவர், நகை-பணத்துடன் தமிழகத்திற்கு தப்பி சென்று விட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஹரிலால் தலைமையிலான போலீசார், தமிழகம் சென்று ரகசியமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நாகர்கோவிலில் சிந்து பதுங்கி இருப்பது தெரியவரவே, போலீசார் நாகர்கோவில் வந்து அவரை கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த முகமது ஹாஜா (29) என்பவரும் கைது செய்யப்பட்டார். வல்லகடவு பகுதியைச் சேர்ந்த இவர், தொழில்முறை கூட்டாளி என்பதும், சிந்துவுடன் சேர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று ஆட்டோவில் அழைத்துச் சென்றவருக்கு குளிர்பானத்தில் அவருக்கு தெரியாமல் தூக்க மாத்திரைகளை சிந்து கலந்து கொடுத்ததும் அவர் மயங்கியதும் முகமது ஹாஜாவை வரவழைத்து நகை-பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளனர். நாகர்கோவில் வந்த அவர்கள், தங்கத்தை ஒரு நிறுவனத்தில் விற்று விட்டு கோவா சென்றுள்ள னர். அங்கு பணத்தை ஆடம் பரமாக செலவு செய்து விட்டு நாகர்கோவில் வந்த போதுதான் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். சிந்துவிடம் ஏமாந்தவர்கள், இது வெளியே தெரிந்தால், அவமானம் எனக் கருதி புகார் எதுவும் கொடுக்கா ததால் அவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் எத்தனை பேரிடம் இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளார் என போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×