search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவால் பாதிப்பு
    X

    குமரியில் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவால் பாதிப்பு

    • நாகர்கோவிலில் ஒரே வீட்டில் 2 பேருக்கு தொற்று
    • 298 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 7 பேருக்கு கொரோனா தொற்று

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் மீண்டும் கொேரானா பரவல் அதிகரிக்க தொடங்கி யுள்ளதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் காய்ச்சல் பரிசோதனை முகாமை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் மாநகரப் பகுதியிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 298 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் நகரில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலசூரங்குடி பகுதியில் ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் அதே பகுதியில் ஒரு பெண்ணும் சின்னவண்ணின் விளை பகுதியில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவர்கள் 4 பேரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நாகர்கோவில் நகரில் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரி கள் தடுப்பு நடவ டிக்கை களில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கொசு மருந்து அடித்தல், காய்ச்சல் பரிசோதனை போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.அகஸ்தீஸ்வரம் ஒன்றி யத்தில் ஒருவருக்கும் ராஜாக்கமங்கலம் ஒன்றி யத்தில் இரண்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தை யொட்டியுள்ள கேரளாவில் முககவசம் கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எல்லை பகுதிகளிலும் சுகாதார துறை அதிகாரிகள் பரிசோ தனை மேற்கொண்டு வரு கிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு சென்று வருப வர்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடி யாக பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரி கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×