search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டி காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் - மேயர் மகேஷ் பேச்சு
    X

    பாராளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டி காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் - மேயர் மகேஷ் பேச்சு

    • மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கன்னியா குமரி கிழக்கு மாவட்டத்தில் 2 இடங்களில் நடக்கிறது.
    • குமரி மாவட்டத்தில் சிதலம் அடைந்து கிடைந்த 100 கோவி லுக்கும் ரூ.5 கோடியே 83 லட்சத்தை தமிழக முதல்-அமைச்சர் ஒதுக்கி சிதலம் அடைந்த கோவில்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்பொதுக்கூட்டம் நேற்று மாலை நாகர்கோவில் நாகராஜா கோவில் தேர்மூடு பகுதியில் நடந்தது.

    நாகர்கோவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த் வரவேற்றார். அவைத்தலைவர் பன்னீர் செல்வம், துணை மேயர் மேரிபிரின்சி லதா, துணை செயலாளர்கள் வேல்முருகன், ராஜன், மண்டல தலைவர் ஜவகர், சேக்மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் பாரி பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கன்னியா குமரி கிழக்கு மாவட்டத்தில் 2 இடங்களில் நடக்கிறது. மத்திய அரசு, பள்ளிகளில் இந்தி படித்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சி பெறும் என்று தமிழோடு சேர்த்து இந்தியையும் படிக்கவேண்டும் என்று உத்தர விட்டது. அதை எதிர்த்து கருணாநிதி 14 வயதில் போராட்டம் நடத்தினார். பல தமிழர்கள் தங்களது இன்னுயிரை மாய்த்து கொண்டனர்.

    அவர்களது நினைவாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25-ந்தேதி வீர வணக்க நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தியாகிகளை பற்றி பேசு வதற்கு வாய்ப்பு பெற்ற தற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கன்னியா குமரி மாவட்டத்தில் இந் துக்கு எதிரி தி.மு.க. என ஒரு பிம்பத்தை பாரதிய ஜனதா கட்சியினர் உருவாக்கி வருகிறார்கள்.

    ரூ.1 கோடி ஒதுக்கீடு

    பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களுக்கு ஒன்று சொல்கிறேன், தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மேம்பாட் டிற்கு தமிழக முதல்- அமைச்சர் அதிக நிதியை ஒதுக்கி யுள்ளார். ஒரு காலத்தில் நாகராஜா கோவிலுக்குள் செல்லமுடியாது தாழ்த்தப் பட்டவர்கள், ஒடுக்கப் பட்டவர்கள் என்று சொல் லப்பட்டதால் நம்மை உள்ளே அனுமதிக்கவில்லை. காலில் செருப்பு போட முடியாது. கோவிலுக்குள் செல்ல முடியாது, கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது இதுதான் ஒரு காலத்தில் இருந்தது. குல தொழிலை செய்ய வேண்டும் என்று ராஜாஜி கொண்டு வந்தார். அந்த நிலையை மாற்றியவர் தான் பெரியார்.

    இன்று திராவிட மாடல் ஆட்சியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு பணி செய்வது நமக்கு கிடைத்த வாய்ப்பு. யார்,யார் எப்படி செயல் பட்டுக் கொண்டிருக்கி றார்கள், மாநிலத்தில் என்னென்ன நடக்கிறது என்று தமிழக முதல்-அமைச்சர் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார். இந்து என்றால் பாரதிய ஜனதா என்ற நிலைப்பாட்டை பாரதிய ஜனதாவினர் மாற்றிக் கொள்ள வேண்டும். நாகராஜா கோவில் குட முழுக்கு நடத்த ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது குமரி மாவட்டத்தில் சிதலம் அடைந்து கிடைந்த 100 கோவி லுக்கும் ரூ.5 கோடியே 83 லட்சத்தை தமிழக முதல்-அமைச்சர் ஒதுக்கி சிதலம் அடைந்த கோவில்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் குமரி மாவட்டத் திற்கு கோவில் புனரமைப் புக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் இந்தி திணிப்பிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ெரயில்வே, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட மத்திய அரசு துறையில் உள்ள வேலைவாய்ப்பில் தமிழர் ஒருவருக்கு கூட வேலை இல்லை.

    இதனால் வருகிற நாடாளு மன்றத் தேர்தலில் தமிழக முதல்-அமைச்சர் சுட்டிக் காட்டுகின்ற வேட்பா ளரை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்றார்.

    பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் ராஜரெத்தினம், மாநில கலை இலக்கிய செயலாளர் தில்லைசெல்வன், மீனவரணி மாநில துணைச் செயலாளர் பசலியான், செயற்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×