search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு

    • மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின்கீழ் பதிவு மற்றும் பதிவு புதுப்பித்தல் பெற்றிருக்க வேண்டும்.
    • இச்சட்டத்தின்கீழ் முறையாக பதிவு மற்றும் பதிவு புதுப்பித்தல் பெற்றிருத்தல் வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத் தில் மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பதற்காகவும், சிறப்பு பயிற்சிகள் மற்றும் தொழிற்கல்வி வழங்கிடவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக காப்பகங்கள், இல்லங்கள், சிறப்புப்பள்ளிகள் மற்றும் ஆரம்பகால பயிற்சி மையங்கள் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்து வருகிறது.

    இம்மையங்கள் மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016-ன்படி மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின்கீழ் பதிவு மற்றும் பதிவு புதுப்பித்தல் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்.

    எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்து வரும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இச்சட்டத்தின்கீழ் முறையாக பதிவு மற்றும் பதிவு புதுப்பித்தல் பெற்றிருத்தல் வேண்டும் எனவும், இதுவரை பதிவு செய்யாமல் செயல்படும் நிறுவனங்கள் உடனடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பதிவு பெற்றிடுமாறும், பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மீது மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×