search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிேஷ பணிகள் தீவிரம்
    X

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிேஷ பணிகள் தீவிரம்

    • ஆதிகே சவப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் 450 ஆண்டுகளுக்குப்பின்னர் நடைபெறுகிறது
    • பக்தர்கள் ரூ.4,93,992 உண்டியலில் காணிக்கையாக வழங்கியிருந்தனர்

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    108 வைணவத்திருப்ப திகளில் ஒன்றானதும் நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலமும் ஆகிய திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் 450 ஆண்டுகளுக்குப்பின்னர் வரும் ஜூலை மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி, மீயூரல் ஓவியங்கள் சீரமைக்கும் பணி, மட ப்பள்ளி சீரமைப்பு ஆகியன நடந்து வருகிறது. கோவில் பிரகாரத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி முடிவ டைந்து விட்டது.

    பிரகாரங்களில் வர்ணம் பூசும்பணி நடந்து வருகிறது. கோவில் கருவறையின் மேல்பகுதி விமானம் சுத்தப்படுத்தி அதன் மீது அஷ்டபந்தன காவி பூசும் பணி நேற்று துவங்கி நடந்து வருகிறது. சுற்றுப்புற சுவர் காவி மற்றும் வெள்ளை வ ர்ணம் பூசப்பட்டு வருகிறது.

    கோவில் உள் பகுதி மற்றும் வெளிப்பகுதியில் கும்பாபிஷேகத்தை யொட்டி விளக்குகள் பொருத்தப்பட்டு நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்ப ட்டது.

    கோவிலின் கிழக்கு வாசலையொட்டிய பகுதியில் பந்தல் அமைப்பதற்காக பிரமாண்ட தூண்கள் நிறுவும் வேலை நேற்று துவங்கியது.

    மேலும் கிழக்கு வாசலை யொட்டி இடையூறாக இருந்த பழமையான கட்டிடம் இடித்து மாற்றப்பட்டது.

    வரும் ஜூன் 29.ந்தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பமாகிறது. ஜூன் 30.ந்தேதி பாலால யத்தில் பூஜையில் இருக்கும் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கருவ றைக்கு ஏழு ஆண்டுகளுக்குப்பின்னர் எடுத்துச்செல்லப்படுகிறது. தொடர்ந்து அங்கு பூஜைகள் நடைபெறும்.

    ஜூலை மாதம் 5.ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

    ஜூலை மாதம் 6.ந்தேதி காலை 5.10 முதல் 5.50 மணி வரை ஜீவகலச அபிஷேகம், காலை 6.00 மணி முதல் 6.50க்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். மேலும் குலசேகரப்பெருமாள் கோவில், திருவம்பாடி கிருஷ்ணசாமி சன்னதி, தர்மசாஸ்தா சன்னதியிலும் கும்பாபிஷேகம் நடை பெறும். ஜூலை9-ந்தேதி தங்கக்கொடிமர பிரதிஷ்டை நடைபெறும்.

    கோவிலில் 5 இடங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும், 6 குடங்களும் திறக்கப்பட்டு. அதிலிருந்த பணம் எண்ணப்பட்டது. அறநிலையத்துறை சூப்பிரண்டு ஆனந்த், கோவில் மேலாளர் மோகன் குமார் முன்னிலையில் பக்தர்கள் கோவில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் ரூ.4,93,992 உண்டியலில் காணிக்கையாக வழங்கியிருந்தனர்.ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தான் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×