search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் விடிய விடிய மழை

    • மயிலாடியில் 52.4 மி.மீ. பதிவு
    • ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தென்கி ழக்கு அரபிக்கடல் பகுதி யில் உருவாகியுள்ள காற்ற ழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது.அதிகாலை 5.30 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமு மாக காணப்பட்டது.அவ்வப் போது மழை பெய்தது.

    இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர். மயிலாடி, கொட்டாரம் பகுதிகளிலும் இன்று அதிகா லையில் கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடியில் அதிக பட்சமாக 52.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, ஆரல்வாய் மொழி, கோழிப்போர் விளை, அடையாமடை, குருந்தன் கோடு, முள்ளங்கி னாவிளை, ஆணைக்கிடங்கு, இரணியல், குளச்சல், தக்கலை, சுருளோடு பகுதி களிலும் மழை பெய்தது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் அணையின் நீர்பிடிப்பு பகுதியான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதையடுத்து அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவ தால் அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது.அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். கோதையாறு, வள்ளியாறு, பரளி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 41.87 அடியாக உள்ளது. அணைக்கு 1003 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 233 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.79 அடியாக உள்ளது. அணைக்கு 386 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 14.84 அடியாக உள்ளது. அணைக்கு 239 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. 3 அணைகளில் இருந்தும் 733 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.அணையின் நீர்மட்டம் இன்று காலை 17.30 அடியாக உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழு வதும் இதுவரை 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உள்ளது. நேற்று அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மேலும் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தொழிலா ளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-23.6, பெருஞ்சாணி-14.8, சிற்றாறு-1-19.4, சிற்றார்-2-33.6, பூதப்பாண்டி-15.2, களியல்-14.8, கன்னிமார்- 12.4, கொட்டாரம்-48.4, குழித்துறை-7, மயிலாடி-52.4, நாகர்கோவில்-40.4, புத்தன் அணை-13.2, சுருளோடு-15.2, தக்கலை- 13.3, குளச்சல்-12.8, இரணியல்-22.4, பால மோர்-22.4, மாம்பழத்து றையாறு-25, திற்பரப்பு- 15.2, ஆரல்வாய்மொழி- 9.2, கோழிபோர்விளை- 17.4, அடையாமடை-27, குருந்தன்கோடு-10, முள்ளங்கினாவிளை- 12.6, ஆணைக்கிடங்கு-23, முக்கடல்-11.

    Next Story
    ×