search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கன்னியாகுமரிக்கு மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி மாலை வருகை
    X

    கன்னியாகுமரிக்கு மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி மாலை வருகை

    • தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு
    • ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3750கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    வருகிற 7-ந் தேதி இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்கிறது.நிகழ்ச்சி யில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலி ருந்து விமானம் மூலமாக வருகிற 7-ந்தேதி காலை தூத்துக்குடி வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மதியம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்து சேருகிறார். பின்னர் ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி பாதயாத்திரையை அவர் தொடங்கி வைக்கிறார்.

    பின்னர் மாலை இங்கிருந்து கார் மூலமாக நெல்லை புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் மேயருமான மகேஷ் தலை மையில், மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மு. க.ஸ்டாலினை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஸ்டாலினை வரவேற்கும் வகையில் கன்னியாகுமரி முதல் மாவட்ட எல்லையான காவல்கிணறு வரை கொடி தோரணங்களும் வரவேற்பு பதாகைகளும் கட்டுவதற்கும் ஏற்பாடுகளை செய்து வரு கிறார்கள்.

    Next Story
    ×