search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரி சந்தையில் இன்று மாநகராட்சி அதிரடி ஆய்வு - அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என புகார்
    X

    வடசேரி சந்தையில் இன்று மாநகராட்சி அதிரடி ஆய்வு - அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என புகார்

    • நடை பாதை கடைகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
    • வியாபாரிகள் தாமாகவே முன்வந்து தங்களது பொருட்களை கடைக்குள் வைத்து வியாபாரம் செய்வதாக உறுதி அளித்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரியில் மாநகராட்சிக்கு சொந்தமான கனகமூலம் சந்தை உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் 150 கடைகளில் மட்டுமே வியாபாரிகள், காய்கறிகள் மற்றும் பல்வேறு விதமான பொருட்கள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். 100-க்கும் மேற்பட்ட கடைகள் காலியாகவே உள்ளது. சந்தையின் தெற்குபுற த்தில் உள்ள நடைபாதையில், வியாபாரிகள் மேல் கூரை அமைத்து கடை அமைத்திருந்தனர்.

    காய்கறிகள், வெற்றிலை பாக்கு, பலசரக்கு பொருட்கள் வைத்து அங்கு விற்பனை செய்து வந்தனர். இங்கு கடையை விட்டு வெளிப்புறமாக வைத்திருந்த பொருட்களை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பலமுறை தெரிவித்து வந்தனர்.

    பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் கூறி வந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் ஞானப்பா, சுப்பையா, சேகர், ஆல்ரின் மற்றும் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தையின் தெற்கு புறத்தில் நடைபாதையில் வைத்திருந்த கடைகளை அப்புறப்படுத்தும்படி வியாபாரிகளிடம் கூறினார்கள்.

    இதையடுத்து ஒரு சில வியாபாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றினார்கள். ஆனால் சில வியாபாரிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கொரோனா காலத்தில் மிகவும் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது நடைபாதையில் வைத்து விற்பனை செய்தால் தான் வியாபாரம் நடக்கிறது.

    இதன் மூலம் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. எனவே நடைபாதையில் வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அதிகாரிகள் மறுப்பு தெரிவி த்தனர். இதனால் அதிகாரி களுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து வியாபாரிகளிடம் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். வியாபாரிகள் தாமாகவே முன்வந்து தங்களது பொருட்களை கடைக்குள் வைத்து வியாபாரம் செய்வதாக உறுதி அளித்தனர்.

    பின்னர் பொருட்களை அவர்களாகவே தங்களது கடையின் உள் பகுதியில் எடுத்து வைத்தனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சந்தையின் உள்புறமாக சென்று நடை பாதையில் வைத்திருந்த கடைகளை அகற்றுமாறு தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து வியாபாரிகள் சந்தையின் உள் பகுதியிலும் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மற்றும் பொரு ட்களை அகற்றினார்கள்.

    இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. மாநகராட்சி சந்தைக்கான நுழைவாயிலில் கேட் இல்லாமல் திறந்து கிடப்பதால் அடிக்கடி திருட்டு சம்பவங்களும் நடந்து வருகிறது.

    மேலும் தற்பொழுது குப்பைகளையும் கொட்டி வருகிறார்கள். வியாபாரிகளுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது வியாபாரிகளின் வயிற்றில் அடிப்பது ஆகும்.

    எனவே மாநகராட்சி நிர்வாகம் வியாபாரி களுக்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×