என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முட்டம் இரட்டை கொலை - கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
- 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில்:
முட்டம் தூய குழந்தைஏசு தெருவைச் சேர்ந்தவர் ஆண்றோ சகாயராஜ்.
இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவுலின் மேரி (வயது 48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 2-வது மகன் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வந்தார். வீட்டில் பவுலின் மேரியும் அவரது தாயார் திரேசம்மாளும் வசித்து வந்தனர்.
கடந்த 6-ந்தேதி பவுலின் மேரி, திரேசம்மாள் ஆகியோர் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மங்கி குல்லா மற்றும் முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் கொலைக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வட மாநில வாலிபர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
குற்றவாளிகளை கண்டு பிடிக்காமல் வழக்கு கிடப்பில் கிடக்கிறது.கொலை நடந்து 14 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். இந்த வழக்கில் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்