search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர். அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் அரவிந்த் கொடி ஏற்றினார் - 85 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம்- ரூ.23½ லட்சம் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது
    X

    நாகர். அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் அரவிந்த் கொடி ஏற்றினார் - 85 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம்- ரூ.23½ லட்சம் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது

    • சிறப்பாக பணிபுரிந்த 85 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
    • 155 அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். விளையாட்டு துறை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான தடகள மற்றும் கைப்பந்து போட்டிகளில் பரிசு பெற்ற 6 வீராங்கனைகள் கவுரவிக்கப்பட்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட நிர்வா கம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நடந்தது. விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடன் இருந்தார். பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் மூவர்ண பலூன்களை கலெக்டர் அரவிந்த் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகி யோர் வானில் பறக்க விட்ட னர்.

    இதைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த 85 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய 18 போலீசாருக்கு நற்சான்றி தழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். போலீசார், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள், தீயணைப்பு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 120 மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தோட்டக் கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 77 ஆயிரத்து 400 நிதி உதவி யையும் கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.முன்னாள் படை வீரர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வருவாய் துறை சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 23 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 62 ஆயிரத்து 530 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அரவிந்த் வழங்கி னார். அரசு துறையில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வருவாய்த்துறை, நக ராட்சி, பேரூராட்சி, மருத்து வம், தீயணைப்புத்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை துறை, மின்சார வாரியம், உணவு பாதுகாப்பு துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 155 அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கி னார். விளையாட்டு துறை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான தடகள மற்றும் கைப்பந்து போட்டி களில் பரிசு பெற்ற 6 வீராங்கனைகள் கவுர விக்கப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. 12 பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

    விழாவில் விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், மாவட்ட வன அதிகாரி இளையராஜா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி, ராஜகுமாரி சப்-கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் குணால் யாதவ், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ், ஏ.டி.எஸ்.பி.க்கள் ஈஸ்வரன், ராஜேந்திரன், டி.எஸ்.பி. நவீன்குமார், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×