search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாணவரணி சார்பில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் - இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    குமரி மாணவரணி சார்பில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் - இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு

    • அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது இதற்கு உதாரணம் இடைத் தேர்தலில் எடப்பாடி சந்திக்க தயாராக உள்ளார்.
    • அ.தி.மு.க. மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கூட்டத்தை சிறப்பான முறையில் செயல்பட்டு தனி நபராக நின்று நடத்திய மாவட்ட மாண வரணி செயலாளர் மனோகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாகர்கோவில், செம்மாங் குடி ரோட்டில் நடைபெற்றது. மாவட்ட மாணவரணி செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில், தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது, தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதா வது:-

    அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது இதற்கு உதாரணம் இடைத் தேர்தலில் எடப்பாடி சந்திக்க தயாராக உள்ளார். அ.தி.மு.க.வை, இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது. அப்படி முடக்க நினைத்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தி ருக்கும், ஆனால் சரிந்து விட்டது. எனவே தான் அ.தி.மு.க.விற்கு துரோகம் நினைத்தவர்களுடன் இனி ஓட்டும் உறவு கிடையாது என எடப்பாடி கூறி விட் டார்.

    நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க.வில் இருந்தபோது அவருக்கு உடல்நலம் சரி யில்லாமல் ஏற்பட்டது. அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சைக்கு 27 லட்ச ரூபாய் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டது. நான்தான் கட்டினேன். அதே நாஞ்சில் சம்பத் இன்று தி.மு.க.வில் உள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளார். தமிழக முதல்வர் தொலை பேசியில் நலம் விசாரிக்கி றார். இதுதான் தி.மு.க.வின் நிலை. அ.தி.மு.க. சோதனை காலத்திலும் தலை நிமிர்ந்து நிற்கிறது. இதற்கு காரணம் அடிமட்ட தொண்டன். ஆனால் தி.மு.க. அமைச்சர் தொண்டனை கல்தூக்கி எறிகிறார். இந்த காட்சியை எங்காவது பார்க்க முடி யுமா. இதுதான் தி.மு.க.வின் லட்சணம். தமிழக சபாநாயகர் குமரி மாவட்ட அதிகாரிகளின் மிரட்டி ராதாபுரம் கால்வாயில் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் தண்ணீர் திறந்து விட வைத்துள்ளார். இதனால் அஞ்சுகிராமம், புத்தளம் பகுதியை சேர்ந்த கடை மடை பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வரு கின்றனர். இவ்வாறு குமரி விவசாயிகளை வஞ்சிப்பது சபாநாயகருக்கு அழகல்ல.

    குமரி மாவட்டத்தை பொறுத்த அளவில் வெள் ளத்தால் சேதம் அடைந்த குளங்கள் இப்போதும் சாக்கு மூட்டைகளால் அடைக்கப்பட்டுள்ளது. சாலைகள் படுமோசமாக மக்கள் பயன்படுத்த முடி யாத அளவு உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டாகியும் இதுவரை இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை.குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கூட்டத்தை சிறப்பான முறையில் செயல்பட்டு தனி நபராக நின்று நடத்திய மாவட்ட மாண வரணி செயலாளர் மனோகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், அமைப்புச் செயலாளர் பச்சைமால், தலைமைக் கழக பேச்சாளர்கள் குமுதா பெருமாள், வைகை பாண்டியன் ஆகியோர் பேசி னார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், அவைத் தலைவர் சேவியர் மனோகரன், இணைச் செய லாளர் சாந்தினி பகவதி யப்பன், பகுதி செயலா ளர்கள் வழக்கறிஞர் ஜெய கோபால், வழக்கறிஞர் முருகேஷ்வ ரன், ஜெபின் விசு, ஒன்றிய செயலாளர் ஜெஸீம், ஆர ல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்து குமார், மாநகராட்சி கவுன்சி லர்கள் அக்ஷயா கண்ணன், ஸ்ரீலிஜா, அனிலா சுகு மாறன், பொதுக்குழு உறுப்பி னர் சகாயராஜ், குளச்சல் தொகுதி பொறுப்பாளர் ஆறுமுக ராஜா, குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், முன்னாள் நகர செயலாளர் சந்துரு, நிர்வாகிகள் ெரயி லடி மாதவன், வடிவை மகாதேவன், மாவட்ட பிரதிநிதி ரபீக், தோவாளை வடக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

    Next Story
    ×