search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகாசி விசாக திருவிழா நிறைவடைந்ததையொட்டி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் திறப்பு
    X

    வைகாசி விசாக திருவிழா நிறைவடைந்ததையொட்டி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் திறப்பு

    • 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும்
    • கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம் வர செய்தனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந்தேதி முதல் 10 நாட்கள் தொடர்ந்து நடை பெற்றது. திருவிழாவை யொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமயஉரை, இன்னிசை கச்சேரி, பரத நாட்டியம், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இந்த வைகாசி விசாக திருவிழா நிறைவு பெற்றதை யொட்டி நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து ஆடி அமாவாசை, தை அமாவாசை, கார்த்திகை தீபத் திருவிழா, புரட்டாசி மாத நவராத்திரி பரிவேட்டை திருவிழா, வைகாசி விசாகம் ஆகிய 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் 10-ம் திருவிழா அன்று நள்ளிரவு திறக்கப்பட் டது. அந்த வாசல் வழியாக உற்சவ அம்பாள் விக்ர கத்தையும், மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீபலி விக்ரகத்தையும் கோவில் மேல்சாந்திகள் விட்டல், பத்மநாபன், சீனிவாசன், கண்ணன், நிதின்சங்கர், மற்றும் கீழ் சாந்திகள் ராம்பிரகாஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் பூஜைகள் நடத்தி கோவிலுக்குள் பிரவேசிக்க செய்தனர்.

    அதன் பிறகு அந்த விக்ரகங்களை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம் வர செய்தனர். அத்துடன் வைகாசி விசாக திருவிழா நிறைவடைந்தது. முன்னதாக காலையில் சிறப்பு பூஜைகள் நடத்தி கொடி இறக்கப்பட்டது.

    இதில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோ வில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×