search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பரிகார பூஜைகள்
    X

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பரிகார பூஜைகள்

    • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • தேவ பிரசன்னம் பார்க்கப்பட்ட போது கும்பாபி ஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி நேற்று பரிகார பூஜைகள் நடைபெற்றது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்ட போது அப்போது கும்பாபி ஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.


    அதன்படி கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்று வந்தது திரிகால பூஜைகள், கணபதி பகவதி சேவை, தேவி பூஜை மணிக்கு சுத்தி கலச பூஜை, கலசாபிஷேகம் சர்ப்பபலி பூஜை ஆகியன நடைபெற்றது.


    நேற்று காலை கணபதி ஹோமத்தைத்தொடர்ந்து பரிகார பூஜைகளில் ஒன்றான சுகிர்த ஹோமம் நடைபெற்றது. கோவில் தந்திரி சஜித் சங்கர நாராயணரு மற்றும் நான்கு அர்ச்சகர்கள் சேர்ந்து சுதர்தன ஹோமம் நடத்தினர்கள்.


    கோவிலின் புனிதத்தை அதிகரிக்கச்செய்யவும், கும்பாபிஷேக விழா சிறப்புற நடைபெறுவதற்காகவும் நடத்தப்படும் சுகிர்த ஹோமம் இன்றும் காலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. நேற்று நடந்து சுகிர்த ஹோம பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×