search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    • பண்டிகை காலங்கள் நெருங்குவதையடுத்து நடவடிக்கை
    • போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாருக்கான மாதாந்திர குற்ற தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதியோர் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள முதியோர் கட்டுப்பாட்டு அறைக்கான உதவி எண் 14567 தொடர்பான விழிப்பு ணர்வு ஸ்டிக்கரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளி யிட்டார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பேசியதா வது:-

    குமரி மாவட்டத்தில் தற்பொழுது திருட்டு சம்பவங்கள் அதிக அளவு நடந்து வருகிறது.குறிப்பாக ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளை யர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். இதை தடுக்கும் வகையில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளது.

    இதைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் புத்தாண்டு பொங்கல் பண்டிகைகளும் வர உள்ளது. அந்த காலங் களில் மாவட்டம் முழுவ தும் பாதுகாப்பை அதிக ரிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பஸ் நிலை யங்கள் கடை வீதிகள் மார்க்கெட் பகுதிகளில் மாறு வேடங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதுடன் வாகன சோதனையை தீவிர படுத்த வேண்டும்.

    வங்கிகளில் இருந்து பணம் எடுத்துச் செல்ப வர்கள் நகைகளை வாங்கி செல்பவர்கள் கவனமாக எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். போஸ்கோ வழக்குகள் மற்றும் பெண்க ளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். பழைய குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் நன்னடத்தை சான்றிதழ் எழுதி வாங்கப்பட வேண்டும்.குமரி மாவட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள ரவுடிகள் பட்டியலை தயாரித்து அவர்கள் அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கஞ்சா குட்கா புகையிலை விற்பனை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் .தொடர்ந்து கஞ்சா மற்றும் குட்கா விற்பனை ஈடுபடுபவர்கள் மற்றும் குற்ற செயல் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×