search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் போலீசார் விழிப்புணர்வு இருசக்கர பேரணி
    X

    இரு சக்கர வாகன பேரணியில் பங்கேற்ற போலீசார் 

    நாகர்கோவிலில் போலீசார் விழிப்புணர்வு இருசக்கர பேரணி

    • பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசாரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ஆயுதப்படை மைதானத்தில் இருந்து தொடங்கியது. பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். ஆயுதப்படை மைதானத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி பீச் ரோடு, செட்டிகுளம் கலெக்டர் அலுவலகம் வழியாக பார்வதிபுரம் சென்றடைந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார்.

    ஏ.டி.எஸ்.பி.கள், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத் தில் தீபாவளி பண்டிகை பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவ தும் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கினார். மேலும் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×