search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார்
    X

    கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார்

    • 7-ந் தேதி பாத யாத்திரை தொடக்கம்
    • சுற்றுப்பயணம் முழு விவரம் வெளியீடு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    வருகிற 7-ந்தேதி கன்னி யாகுமரியில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறார். 3570 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் 12 மாநிலங்களை கடந்து காஷ்மீரில் பாதயாத்திரை நிறைவு செய்கிறார். ராகுல் காந்தி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கு வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசாரும், குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி களும் மேற்கொண்டு வரு கிறார்கள்.

    ராகுல் காந்தி செல்ல உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் ஆய்வு செய் யப்பட்டு வருகிறது.ஏற்க னவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேரில் வந்து ஆய்வு செய்திருந்த நிலையில் எம்.பி.க்கள் ஜோதிமணி, செல்லக்குமார், விஜய் வசந்த் ஆகியோர் இங்கேயே முகாமிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வரு கிறார்கள்.

    7-ந்தேதி காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரிக்கு வரும் ராகுல்காந்தி மாலை கன்னி யாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கன்னியா குமரியில் பொதுக் கூட் டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடம் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்பட உள்ளது.

    7-ந்தேதி இரவு கன்னியாகுமரியில் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து பாத யாத்திரை தொடங்குகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகா னந்தா கல்லூரி வரை பாதயாத்திரை மேற் கொள் கிறார். அன்று இரவு விவே கானந்தா கல்லூரியில் தங்கும் வகையில் ஏற்பா டுகள் செய்யப்பட்டு வரு கிறது.

    8-ந்தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு கொட்டாரம் வருகிறார். அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து பொற்றையடி, வழுக்கம் பாறை வழியாக சுசீந்தி ரம் வந்தடைகிறார்.சுசீந்தி ரம் பள்ளியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

    பின்னர் மாலை அங்கி ருந்து புறப்பட்டு நாகர் கோவில் சவேரியார் ஆலயம் டெரிக் சந்திப்பு வழியாக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூ ரியை வந்தடைகிறார். இரவு ஸ்காட் கல்லூரியில் தங்குகிறார். 9-ந்தேதி காலை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூ ரியில் இருந்து தனது பாத யாத்திரையை தொடங்கு கிறார்.

    சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக புலியூர்குறிச்சி செல்கிறார். அங்கு புலியூர்குறிச்சியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியத்திற்கு பிறகு புலியூர் குறிச்சியில் இருந்து மேட்டுக் கடை வழியாக மூளகுமூடு சென்றடைகிறார்.அன்று இரவு மூளகுமூடு சென்மேரிஸ் பள்ளியில் தங்குகிறார்.

    10-ந்தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு சாமியார் மடம் சிராயன்குழி வழியாக மார்த்தாண்டம் சென்றடைகிறார். மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பின்னர் மதியத்திற்கு பிறகு அங்கி ருந்து புறப்பட்டு குழித்துறை சந்திப்பு, படந்தாலுமூடு சந்திப்பு வழியாக தலைச்சன் விளை செல்கிறார். அன்று இரவு செருவாரக்கோணம் பள்ளியில் தங்குகிறார்.

    11-ந்தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு கேரளா மாநிலம் செல்கிறார்.இந்த இடங்களை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

    இன்னும் ஒரு சில நாட்களில் ராகுல் காந்தி குமரி மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொள்ள பாதைகள் இறுதி வடிவம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×