search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு
    X

    குமரியில் மழை நீடிப்பு

    • புத்தன் அணையில் 21.6 மி.மீ. பதிவு
    • மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சாரல் மழை பெய்து வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.

    பேச்சிப்பாறை, பெரு ஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் நேற்று மழை பெய்தது. புத்தன் அணை பகுதியில் ஒரு மணி நேரத்து க்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    அங்கு அதிகபட்சமாக 21.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கொட்டா ரம், குழித்துறை, கோழிப்போர்விளை, அடை யாமடை, முள்ளங்கினா விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    சுசீந்திரம், சாமிதோப்பு, கொட்டாரம் பகுதிகளில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் மிதமான அளவும் தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை கள் நீர்மட்டம் முழு கொள்ள ளவை எட்டி உள்ள நிலையில் அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.56 அடியாக உள்ளது. அணைக்கு 699 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.10 அடியாக உள்ளது. அணைக்கு 45 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 575 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு1 அணை நீர் மட்டம் 12.33 அடியாகவும், சிற்றாறு2 அணையின் நீர் மட்டம் 12.43 அடியா கவும் பொய்கை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்பழ த்துறையாறு அணையின் நீர்மட்டம் 38.30 அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி, சிற்றாறு1 அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகி றது. நாக ர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்ம ட்டம் 14.20 அடியாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×