search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே அம்மன் கோவிலில் கொள்ளை
    X

    இரணியல் அருகே அம்மன் கோவிலில் கொள்ளை

    • பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து பூஜையில் பங்கேற்று வருகின்றனர்
    • கொள்ளை போன பித்தளை பாத்திரங்களின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள காற்றாடி மூட்டிலிருந்து முட்டம் செல்லும் சாலையில் புகழ்பெற்ற செக்காலத்தெரு முத்தாரம்மன் கோவில் உள்ளது.

    இங்கு காலை, மாலை என இரு வேளைகளில் பூஜைகள் நடந்து வருகின்றன. மேலும் பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடு கள் நடைபெறும். அப்போது பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து பூஜையில் பங்கேற்று வருகின்றனர்.

    சம்பவத்தன்று காலை வழிபாடுகள் முடிந்ததும் பக்தர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அதன் பிறகு பூசாரி கணேஷ், பூஜைக்கான பொருட்கள் மற்றும் கோவிலில் உள்ள பித்தளை பாத்திரங்கள் போன்றவற்றை கழுவுவ தற்காக ஓரு இடத்தில் வைத்துள்ளார்.

    பின்னர் கோவிலை பூட்டிச் சென்ற அவர், மாலையில் கோவிலுக்கு வந்தார். அப்போது தான் வைத்துச் சென்ற பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை யாரோ கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

    கொள்ளை போன பித்தளை பாத்திரங்களின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இது குறித்து ஊர் தலைவர் வேணுகோபாலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர், கொள்ளை சம்பவம் குறித்து இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    கோவிலுக்குள் புகுந்து பாத்திரங்கள் மற்றும் பொருட்களை கொள்ளை யடித்த சம்பவம் அந்த பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×