search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டத்தில் 13½ கிலோ கஞ்சா - ரூ.60 ஆயிரம் பறிமுதல்
    X

    மார்த்தாண்டத்தில் 13½ கிலோ கஞ்சா - ரூ.60 ஆயிரம் பறிமுதல்

    • போலீசார் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து இளம்பெண் உள்பட 2 பேர் கைது
    • கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்ப தாக தெரிய வந்ததையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்யவும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை சப்-டிவிச னுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா வியாபாரிகள் 59 பேரின் வங்கிக் கணக்கு களும் முடக்கப்பட்டு உள்ளது.

    போலீசார் கஞ்சா விற்பனையை கண்காணித்து வருகிறார்கள். மார்த் தாண்டம் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டபோது அங்கு சந்தே கப்படும் படியாக நின்று கொண்டிருந்த இளம்பெண் மற்றும் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர்.

    அப்போது அவரது கையில் இருந்த பேக்கை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதை யடுத்து அந்த வாலிபரையும் இளம்பெண்ணையும் போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13½ கிலோ கஞ்சா மற்றும் ரூ.60 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் கண்ணனூர் பூந்தோப்பை சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது 25), சென்னை பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த அஜந்தா (38) என்பதும் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் கஞ்சா பொட்டலங்களை எங்கிருந்து வாங்கி வந்தார்கள். இங்கு யாரிடம் சப்ளை செய்ய கொண்டு வந்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

    கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்ப தாக தெரிய வந்ததையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்யவும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×