search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டார் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
    X

    கோட்டார் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

    • 300 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்படும்
    • தேசிய நெடுஞ்சாலைகளை சீர் செய்வதற்கான பரிந்துரை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும்

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு சட்டப்பே ரவை பொது கணக்கு குழுத்தலைவர் செல்வ பெருந்தகை, கலெக்டர் அரவிந்த் மற்றும் பொது கணக்கு குழு உறுப்பி னர்கள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் அலு வலக வருவாய் கூட்ட ரங்கில் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செல்வ பெருந்தகை நிருபர் களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விவேகா னந்தர் பாறை மற்றும் திருவள்ளு வர் சிலை, குளச்சல் மீன்பிடித்துறை முகம், கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய வற்றை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தேங்காய்பட்டணம் துறைமுகம், குளச்சல் துறைமுகம் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்து மாறு சட்டப்பேரவை பொது கணக்கு குழு பல பரிந்துரைகள் செய்திருக்கிறது. இனிவரும் காலங்களில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் திட்டங்களை தீட்டுவதோடு. அப்பகுதி மீனவர்கள் மற்றும் வசிப்பவர்களிடம் கேட்டறிந்தும், எப்படி செப்பனிட வேண்டும் விபத்துக்கள் ஏற்படாத வகையில் ஆய்வு மேற்கொண்டு செப்பனிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    கோட்டாரில் அமைந்துள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை 300 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்படும். தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் 6 பேர் இறந்துள்ளார்கள்.

    அதில் ஒருவர் வயது முதிர்வு என்ற அடிப்படையில் அன்னாரது குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டு தொகையினை குறைத்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள 5 நபர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை போன்று வயது முதிர்ந்த நபரின் குடும்பத்தினருக்கும் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்படும்.

    களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலைகளை சீர் செய்வதற்கான பரிந்துரை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். மேலும், குடிசை மாற்று வாரியத்தின் வாயிலாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வீடு இல்லாத பொதுமக்களுக்கு வழங்குவதற்கு பரிந்துரை சமர்ப்பிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வுக்கூட்டத்தில், மாவடட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., பொது கணக்கு குழு உறுப்பினர்கள் காந்திராஜன், கார்த்தி கேயன், சிந்தனை செல்வன், வேல்முருகன், சட்டப்பேரவை சிறப்பு அலுவலர் ராஜா, எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, ராஜேஷ்குமார், எம்.ஆர். காந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக் டர் அலர்மேல்மங்கை, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், சட்டப்பேரவை சார்பு செயலாளர் பாலசீனிவா சன், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×