search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குமரியை குளிர்வித்த மழை
    X

    குமரியை குளிர்வித்த மழை

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • கோட்டார் சாலை இன்று 2-வது நாளாக சேறும் சகதியுமாக காட்சி அளித்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் மழை நீடித்தது. நாகர்கோவிலில் இன்று காலை 7 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காலையில் மழை பெய்ததை அடுத்து பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.மழையின் காரணமாக தொடர்ந்து கோட்டார் சாலை இன்று 2-வது நாளாக சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, தக்கலை, ஆரல் வாய்மொழி, புத்தன் அணை, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கே ரம்மியமான சூழலும் நிலவி வருவதால் கேரளாவில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி மற்றும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சிற்றாறு-2-ல் அதிகபட்சமாக 19.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1 அணையில் இருந்து பாச னத்திற்காக 99 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.32 அடியாக இருந்தது. அணைக்கு 908 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 639 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60 அடி எட்டி யது. அணைக்கு 143 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 70 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பொய்கை அணை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணை நீர்மட்டம் 28.63 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×