search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மூலம் மீனவர்களை தேடும் பணி தீவிரம்
    X

    கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மூலம் மீனவர்களை தேடும் பணி தீவிரம்

    • குளச்சலில் குடும்பத்தினர் சோகம்
    • நடுக்கடலில் படகு மூழ்கி 3 பேர் மாயம்

    குளச்சல் :

    குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமான விசைப் படகு வைத்து கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்.

    இந்த படகில் பங்கு தாரரான மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் (52), கொட்டில்பாட்டை சேர்ந்த பயஸ் (54) உட்பட 16 மீனவர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். விசைப்படகை ஆன்றோ ஓட்டினார்.

    நேற்று முன்தினம் நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் இருந்து 30 நாட்டிங்கல் கடல் தூரத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். திடீரென விசைப்படகின் ஒரு பக்கம் சாய்ந்து கவிழ்ந்தது. இதையடுத்து மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த னர். அப்போது அந்த வழியாக விசைப்படகில் வந்த மீனவர்கள் நடுக்கட லில் தத்தளித்த மீனவர்களை மீட்டனர். 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். ஆன்றோ, ஆரோக்கியம், பயஸ் ஆகிய 3 பேரும் மாயமானார்கள்.

    இதையடுத்து அந்த 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. மீட்கப்பட்ட 13 மீனவர்களும் குளச்சல் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கியது குறித்து கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், மீனவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முழுவதும் தேடியும் மீனவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் இருந்து வரப்பட்ட கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மூலம் மீனவர்களை தேடி வருகிறார்கள். மேலும் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்களும் மீனவர்கள் மூழ்கிய பகுதியில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டுள் ளனர். மீனவர்கள் மாயமாகி 36 மணி நேரத்துக்கு மேலாவதால் அவர்களது கதி என்னவென்று தெரியாத நிலை உள்ளது.

    இதனால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். குளச்சலில் உள்ள மாயமான மீனவர் குடும்பத்தினரை அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து பேசினார். மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

    அமைச்சருடன் பிரின்ஸ் எம்.எல்.ஏ. மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளும் சென்று இருந்தனர். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், மாயமான மீனவர்களை கப்பல் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. விசைப்படகு மூழ்கிய பகுதி ஆழமான பகுதி என்பதால் இந்திய கடற்படைக்கு சொந்தமான குழியாளிகளை வைத்து மீட்க வேண்டுமென மீனவர்களின் உறவினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை மீன்வளத்துறை அமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு சென்று மீனவர்களை மீட்க ந டவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

    இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. மீனவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

    இதற்கிடையே 3 மீன வர்கள் மாயமான சம்ப வத்தால் குளச்சல் விசைப் டகினர், வள்ளம் கட்டுமர மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தமாக இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கரை திரும்பிய விசைப்படகி லிருந்து மீன்கள் இறக்கி விற்பனையும் செய்யப படவில்லை. இதனால் மீன் ஏலக்கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×