search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவட்டார் சாலை மூடப்பட்ட விவகாரம்
    X

    திருவட்டார் சாலை மூடப்பட்ட விவகாரம்

    • தக்கலை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை
    • நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே திருவரம்பு சாத்திர விளை பகுதியில் இருந்து கொக்கோட்டு மூலை பகுதிக்கு ஒரு சாலை செல்கிறது.

    இந்த சாலையை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையானது திருவரம்பு- கொக்கோட்டு மூலை இணைப்பு சாலையாக உள்ளது இந்த சாலை அருகே சாத்திரவிளை பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் நிலத்தை விலைக்கு வாங்கினார். வாங்கிய நிலத்தை ஒட்டி யும் சாலை தனக்கு சொந்தமானது என்றும் உரிமை கொண்டாடியதாக கூறப்படுகிறது.

    இதனால் பிரச்சினை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென்று நீதிமன்ற உத்தரவு பெற்று நிலத்தை சுற்றி சுவர் எழுப்பினார். அப்போது அந்த சாலை பகுதி முழுவதையும் சேர்த்து சுவர் எழுப்பி அடைத்து வைத்துள்ளார்.

    அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இணைப்பு சாலையில் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கொக்கோட்டு மூலை ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல முடியாமல் குலசேகரம் வழியாக சுமார் 8 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.அந்த பகுதியை சேர்ந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் திருவரம்பு குலசேகரம் சாலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    திடீரென்று சாலை அடைக்கப்பட்டதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக் கப்பட்ட மக்கள் சாலை யை பொதுமக்கள் பயன்பாட் டுக்கு திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    கோரிக்கை ஏற்கப்படாததால் நேற்று மாலை 4 மணி அளவில் அைடக்கப்பட்ட சாலையை திறந்துவிடக் கோரி திருவட்டார் பேரூ ராட்சி கவுன்சிலர் பிரான்சிஸ் தலைமையில் பொது மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக திருவட்டார் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் வந்திருந்தனர்.

    மறியல் போராட்டம் மாலை 7 மணி வரை நீடித்தது. இந்நிலையில் தக்கலை டி.எஸ்.பி. கணேசன், திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர், திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ், செயல் அலுவலர் மகாராஜன் ஆகி யோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை அதன்பிறகு இரு தரப்பி னரையும் ஆவணங்களையும் பார்த்து முடிவு செய்யலாம் என்று கூறப்பட்டது. இரு தரப்பினரையும் அழைத்து இன்று தக்கலை டி.எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    Next Story
    ×