search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுக்காக பிரசாரத்தை தொடங்கி விட்டோம்
    X

    பாராளுமன்ற தேர்தலுக்காக பிரசாரத்தை தொடங்கி விட்டோம்

    • அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி கொள்கை பரப்பு செயலாளர் பேட்டி
    • எங்களை நாடி வருபவர்களை மதிப்போம்

    குழித்துறை :

    அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி மார்த்தாண்டத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. முதல் தேர்தல் பிரசார கூட்டத்தை நாங்கள் தான் தொடங்கி உள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் மழை வடிவில் எங்களை வாழ்த்தினர். 38 மாவட்டங்களிலும் எங்கள் பொது செயலாளர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய உள்ளார். எங்களை நாடி வருகிறவர்களை நாங்கள் மதிப்போம். பலர் எங்களை தேடி வருகின்றனர். எங்கள் கூட்டணி பலமாக அமையும். விரைவில் நல்ல முடிவு வரும். அதை ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார்.

    எங்கள் கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் தான் போட்டி நடைபெறும். நடிகர் ரஜினிகாந்தை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்ததை ஜெயக்குமார் தவறாக கூறியுள்ளார். கோடநாட்டில் நடந்த கொலை கொள்ளைகளுக்கு எடப்பாடி பழனிசாமிடம் விசாரிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி சிறை சென்று விட்டால் எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும் ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஒன்றாகி விடும்.

    சசிகலா வந்தால் நல்லது சின்னம்மாவுடன் நீண்ட நாள் நான் பயணம் செய்துள்ளேன். மணிப்பூர் கலவரம் குறித்து கண்டனம் தெரிவித்து ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எதுவும் கூறவில்லை. ஏனென்றால் மணிப்பூர் எங்கே இருக்கும் என்று அவருக்கு தெரியாது. பாரதிய ஜனதா லஞ்சத்தை ஒழிப்போம் என்று கூறுகிறார்கள். ஆனால் லஞ்சம் வாங்குபவர்களை கூடவே வைத்துள்ளனர். அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தொடர்ச்சியாக நடக்காமல் 3 நாள் நடந்து விட்டு மறுநாள் கோயம்புத்தூர் போய் நிற்கிறார். மீண்டும் நடைபயணம் செல்கிறார். இது நடைபயணமா என்றே தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் செல்லப்பா, மாநில இலக்கிய அணி இணை செயலாளர் ராஜா டைட்டஸ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ரெத்தினசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×