search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் கணவன் - மனைவி  தற்கொலைக்கு காரணம் என்ன?
    X

    குலசேகரம் கணவன் - மனைவி தற்கொலைக்கு காரணம் என்ன?

    • ரூ.30 லட்சம் கொடுத்ததாக கூறிய வாலிபரை பிடித்து விசாரணை
    • செல்போனையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஐசக் (வயது 35), பிளம்பர். இவரது மனைவி சந்தியா (32).

    இவர்களுக்கு திருமண மாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு சந்தியா தூக்கில் தொங்கிய நிலையிலும் ஜாண் ஐசக் விஷம் குடித்த நிலையிலும் வீட்டில் பிணமாக மீட்கப்பட்டனர்.

    இருவரும் கடன் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலை யில் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் சந்தியாவின் தாயார் காந்தி ஒரு புகார் கொடுத்தார். அதில், தட்டான் விளை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சந்தியாவுக்கு ரூ.30 லட்சம் பணம் கொடுத்ததாக என்னிடம் கூறினார்.

    அவரிடம் எதற்காக பணம் கொடுத்தீர்கள் என்று கேட்டபோது, அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் பணம் கொடுத்ததாக தெரிவித்தார்.

    அந்த பணத்தை திரும்ப வாங்கி தரும்படி என்னிடம் கேட்டார். இல்லாவிட்டால் போலீசில் புகார் கொடுத்து விடுவேன் என்று மிரட்டி னார். இந்த சூழலில் தான் எனது மகளும் மருமகனும் தற்கொலை செய்துள்ளனர். எனவே இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

    அதன் அடிப்படையில் பணம் கொடுத்ததாக கூறிய வாலிபரிடம் தக்கலை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார் இன்று விசாரணை நடத்தி னர்.

    பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் என்ன? எவ்வ ளவு பணம் கொடுக்க ப்பட்டது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    இதற்கிடையே சந்தியா மற்றும் அவரது கணவர் செல்போன்களையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பணம் கொடுத்ததற்கான ஆதாரம் மற்றும் அவர்களை யாரும் மிரட்டினார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ஜாண் ஐசக் - சந்தியா உடல்கள் நேற்று பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

    Next Story
    ×