search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி கடற்கரையில் அம்மன் கோவிலில் திருடிய வாலிபர் கைது
    X

    கன்னியாகுமரி கடற்கரையில் அம்மன் கோவிலில் திருடிய வாலிபர் கைது

    • கடற்கரை ஓரமாக கடல் காத்தாள் படை பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம நபரை தேடி வந்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காமராஜர் மணிமண்டபத்தின் மேற்கு பகுதியில் கடற்கரை ஓரமாக கடல் காத்தாள் படை பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் மேற்கூரை மற்றும் கதவுகள் இன்றி திறந்து வெளியில் பீடங்களுடன் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மாதவபுரத்தை சேர்ந்த போத்திராஜா (வயது 43) என்பவர் பூஜைகள் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு பூஜைகள் செய்துவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது பீடத்தில் இருந்த பித்தளை கோ டாரி மற்றும் அரிவாள் திருடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து போத்திராஜா கன்னியாகுமரி போலீசில் புகார் செய்]தார். அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம நபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் போலீசார் ரோந்து சென்றபோது வாலிபர் ஒருவர் சந்தே கத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர் நெல்லை மாவட்டம் பாளை யங்கோட்டை திருமலை கொழுந்து அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த செல்ல துரை (30) என்பதும், கன்னியாகுமரி கடற்கரை யில் உள்ள கடல் காத்தாள் படை பத்திரகாளியம்மன் கோவிலில் திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

    அதன்பிறகு அவரை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். அவரை காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட் டார்.

    Next Story
    ×