search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் தருமபுரம் -புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    காரைக்கால் தருமபுரம் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காரைக்கால் தருமபுரம் -புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தருமபுரத்தில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது
    • கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியை, ஆலய பங்குத்தந்தை மந்திரித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தருமபுரத்தில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆண்டுத்திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியை, ஆலய பங்குத்தந்தை மந்திரித்தார். தொடர்ந்து, கொடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை வந்தடை ந்தவுடன், பெங்களுரு புனித பேதுரு பாப்பிறை குருமடம் பேராசிரியர் அலெக்சாண்டர் தலை மையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. விழா முடியும் வரை, தினசரி மாலை சிறிய தேர்பவனியும், திருப்பலியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்சியாக, ஏப்ரல் 21-ந் தேதி இரவு, காரைக்கால் குரும்பகரம் பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் 3 பெரிய தேர்பவனியும், ஏப்ரல் 22-ந் தேதி இரவு, நீலகிரியைச்சேர்ந்த பங்குகுரு செபஸ்தியான் தலைமையில், சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு 5 தேர்பவனியும் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 23-ந் தேதி காலை கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    Next Story
    ×