என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வெள்ளியணை அருகே லாரி மோதி 2 பேர் பலி
- கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் இடையப்பட்டியை அடுத்து புங்கம்பாடியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது34) வழக்கறிஞர்.
- கனகராஜ்தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளிலில் சென்ற போது லாரி மோதி பலியானார்.
கரூர்,
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் இடையப்பட்டியை அடுத்து புங்கம்பாடியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது34) வழக்கறிஞர். இவர் கரூர் தாந்தோணிமலையை அடுத்த காளியப்பனூர் ராசிநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புதுவாடிபுதூரை சேர்ந்தவர் முருகவேல். இவர் மனைவி சுசீலா (50). கனகராஜின் மாமியரானா சுசீலா பாலவிடுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மருமகன் கனகராஜுடன் இரு சக்கர வாகனத்தில் காளியப்பனூருக்கு சென்றுள்ளார்.
வெள்ளியணை அருகேயுள்ள ஒத்தையூர் அருகே செல்லும்போது தோகைமலையிலிருந்து ஓசூருக்கு கிரானைட் கல் ஏற்றிச்சென்ற ட்ரெய்லர் லாரி , கனகராஜ் ஓட்டி சென்று இரு சக்கர வாகனத்தின் (ஸ்கூட்டர்) மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து கனகராஜ், சுசீலா சடலங்களை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, லாரி ஓட்டுநரான மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பழைய சுக்காம்ப ட்டியைச் சேர்ந்த கர்ணனை (50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.