என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கரூரில் ஆற்றில் மூழ்கி தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி
- கரூர் மாவட்டம் பள்ளபட்டி சந்தை பேட்டை தெருவைச் சேர்ந்தவர் ஷேக்பரீத் (வயது42). இவரது மகள் மவுபியா (12).
- பண்ணப்பட்டி குடகனாற்றில் மவுபியா இறங்கி குளிக்க முயன்றப்போது நீரில் மூழ்கியுள்ளார்.
கரூர்,
கரூர் மாவட்டம் பள்ளபட்டி சந்தை பேட்டை தெருவைச் சேர்ந்தவர் ஷேக்பரீத் (வயது42). தவணை முறையில் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் மகள் மவுபியா (12). அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது உறவினர் தெற்கு தெருவைச் சேர்ந்த ரியாஜுதீன் (38) ஜவுளித் தொழில் செய்து வருகிறார். இவர்கள் 3 பேர் உள்ளிட்ட 3 குடும்பங்களை சேர்ந்த 4 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் அம்மாபட்டியில் உள்ள கோரித்தோட்டத்தில் உள்ள தர்காவில் நேற்று வழிப்பாடு செய்தனர்.
அதன்பின் எருமார்பட்டி அருகேயுள்ள பண்ணப்பட்டி குடகனாற்றில் மவுபியா இறங்கி குளிக்க முயன்றப்போது நீரில் மூழ்கியுள்ளார். அப்போது ஷேக்பரீத், ரியாஜுதீன் ஆகிய இருவரும் மவுபியாவை காப்பாற்ற நீரில் இறங்கியப்போது அவர்களும் நீரில் மூழ்கினர்.
இதையடுத்து அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து மூவரின் சடலங்களை மீட்டனர்.
இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து 3 பேரில் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.